சவுதி அரேபியாவின் திடீர் தீர்மானம் தொடர்பில் இலங்கை...!

சவுதி அரேபியா அரசாங்கம் கொரோனா வைரஸ் தொற்றினை கருத்தில் கொண்டு மேற்கொள்ளகின்ற தீர்மானங்களுக்கு அமைவாகவே இலங்கை வாழ் முஸ்லிம் சமூகமும் இணங்கி ஒத்துழைக்க வேண்டும் என கொழும்பு பெரிய பள்ளிவாசலின் இமாம் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கா யாத்திரைக்கான வெளிநாட்டவர்களை மட்டுப்படுத்துவது தொடர்பில் சவூதி அரேபியா அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றானது சவுதி அரேபிய மக்களுக்கு தொற்றாமல் இருக்கவும் கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்படாதுள்ள நாட்டர்வகளை பாதுகாப்பதற்கும் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆகையினால் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகமும் சவுதி அரேபியா அரசாங்கத்தின் தீர்மானங்களை ஏற்றுக் கொள்வது அவசியம் ஆகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.

தற்காலிக தடை நீக்கப்படும் பட்சத்தில், மக்கா யாத்திரை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.