ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று பகல் கொழும்பு துறைமுக நகரத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
ஜனாதிபதியின் தலைமையில் சமீபத்தில் இடம்பெற்ற தேசிய சட்ட மாநாட்டின் போது கொழும்பு துறைமுக நகர திட்டம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு துறைமுக நகரத்தின் விரிவாக்கத்துடன் இலங்கையின் வரைபடத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படுகிறது. குறித்த துறைமுக அபிவிருத்திக்காவும் மறுசீரமைப்புக்காகவும் சைனா கம்யுனிகேஷன் கன்ட்ரக்ஷன் நிறுவனமானது 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட திட்டமிட்டுள்ளதாகவும் கட்டிட நிர்மாண பணிகளுக்காக மேலும் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment