கம்­பளை விசேட அதிரடிப்படை­யின் நடவடிக்கை...

வெலம்பொட பகுதியி­லிருந்து உலப்பனை பிர­தேசத்தில் உள்ள தேயிலை தொழிற்­சாலை ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்ட மனித பாவனைக்கு உத­வாத 3,055 கிலோ கழி­வுத் தேயிலையை கம்­பளை பிராந்தியத்­துக்குப் பொறுப்பான விசேட அதிரடிப்படை­யினர் கைப்பற்றியுள்ள­துடன் சந்தேக நபர் ஒருவ­ரையும் கைது செய்­துள்ளனர்.

கிடைக்கப்பெற்ற இரக­சியத் தகவல் ஒன்றின் அடிப்­படையில் நேற்று உலப்­பனை பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த தேயிலை தொழிற்சா­லைக்கு அருகில் வைத்து சந்தேகத்துக்கி­டமான லொறி ஒன்றை சோதனைக்கு உட்படுத்­தியபோதே அனுமதிப்பத்­திரமின்றி கடத்தி கொண்டு செல்லப்பட்ட கழிவுத்தேயிலை பொதிகள் கைப்பற்றப்பட்­டன.

இந்தச் சுற்றிவளைப்பை விஷேட அதிரடிப்ப­டையின் கம்பளை பிராந்­தியத்துக்கு பொறுப்­பான பிரதான அதிகாரி புஷ்பகுமார, உப பொலிஸ் பரிசோதகர் சாஹான் சுப சிங்ஹ மற்றும் தனுஸ்க ரட்நாயக்க ஆகியோர் தலைமையி­லான குழுவினரே மேற்­கொண்டிருந்தனர்.

இதன்போது கைப்பற்றப்­பட்ட கழி வுத்தேயிலை கடத்தலுக்கு பயன்படுத்­தப்பட்ட லொறியுடன் கைது செய்யப்பட்ட சந்­தேக நபரையும் கம்பளை பொலிஸாரிடம் ஒப்­படைக்க நடவடிக்கை­யினை மேற்கொண்டு வருவதாக மேற்படி படையினர் மேலும் தெரிவித்தனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.