அரபு மத்ரசாக்கள் குறித்து கல்வி அமைச்சு விடுக்கும் விசேட அறிவிப்பு

மத்ரசா கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் மூன்று ஆண்டுகளுக்குள் கல்வி அமைச்சின் கல்வி முறைமைக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என நாடாளுமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான மேற்பார்வை குழுவினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான மேற்பார்வை குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மலித் ஜயதிலக குறித்த அறிக்கையினை நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பித்தார்.

முஸ்லிம் மத மற்றும் கலாச்சார விவகார திணைக்களத்தின் கீழ் மத்ரசா நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான விசேட குழுவொன்றை அமைத்தல் , முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தை திருத்துதல் ,இஸ்லாமிய உரை புத்தகங்களை திருத்துவதற்கு அங்கீகரிக்கப்பட்ட நிபுணர் குழுவை நியமித்தல் உள்ளட்ட பலவிடயங்கள் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.