கோட்டாபயவிற்கு சாரதியாக மாறிய நாமல்

தெற்கு அதிவேக வீதியின் மாத்தறை - ஹம்பாந்தோட்டை அதிவேக வீதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதி இலங்கையில் இதுவரை அமைக்கப்பட்ட தொழில்நுட்ப மற்றும் சுற்றுச் சூழலுக்கு ஏற்ப உயர்ந்த தரத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிவேக வீதியாகும்.

இந்த தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 96 கி.மீ நீளமுள்ள கட்டுமானம் நான்கு கட்டங்களைக் கொண்டுள்ளது.

முதல் கட்டமாக மாத்தறையில்இருந்து பெலியத்தை வரை 30 கி.மீ ஆகவும், இரண்டாம் கட்டத்தில் பெலியத்தையிலிருந்து பரவாகும்புகா வரை 26 கி.மீ பகுதியும் , மூன்றாம் கட்டமாக பராவகும்புகாவிலிருந்து அந்தராவேவா வரை 15 கி.மீ வரையும், நான்காம் கட்டத்தில் அண்டராவேவவிலிருந்து ஹம்பாந்தோட்டா மற்றும் மத்தள வரை 25 கி.மீ.வரையும் இந்த அதிவேக வீதி அமைக்கப்பட்டு நேற்று முழுமைபெற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மாத்தறை - ஹம்பாந்தோட்டைக்கு இடையிலாக அமைக்கப்படும் இந்த வீதிக்காக 16 ஆயிரத்து 870 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது முதல் வாகனத்தை ஜனாதிபதியை நாமல் ராஜபக்ச ஏற்றி சென்ற சம்பவம் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.