நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி - கோட்டாபய கையெழுத்து

மார்ச் மாதம் முதலாம் திகதி நள்ளிரவு, நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கையெழுத்திடுவாரென வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாதுக்க பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை கொண்டுசெல்ல பலமான நாடாளுமொன்று அவசியம் என குறிப்பிட்ட அவர், நாட்டை வெளிநாடுகளுக்கு கூறுபோட்ட அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி, மக்களுக்கு வழங்கியிருக்கும் பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

அந்தவகையில் மார்ச் மாதம் முதலாம் திகதி நள்ளிரவுடன் சமகால நாடாளுமன்றத்துக்கு நான்கரை வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில், மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் அன்றைய தினம் நள்ளிரவே நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி கையெழுத்திடுவார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதனூடாக புதிய நாடாளுமன்றத்தை அமைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு மீண்டும் நாட்டு மக்கள் கைகளிலேயே ஒப்படைக்கப்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.