ஜம்மியத்துல் உலமாவுக்கு முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் அச்சுறுத்தல்...?

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பொதுஜன முன்னணி சார்பில், போட்டியிடவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர், ஜம்மியத்துல் உலமாவுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பாராளுமன்ற முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர், இத்தகவலை உறுதிப்படுத்தி உள்ளார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 14 ஆம் திகதி நடந்த ஜூம்ஆ பள்ளிவாசல் குத்பாவில் றிஸ்வி முப்தி, ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவுக்கு ஆதரவாக பிரசங்கம் நிகழ்த்தியாக சமூக ஊடகங்களில் பரவலாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

ஜம்மியத்துல் உலமாவைச் சேர்ந்த சில உலமாக்களும், றிஸ்வி முப்தியின் உரை தொடர்பில் தமது கவலையை வெளிப்படுத்தி உள்ளதுடன், குத்பாவில் றிஸ்வி முப்தி அரசியல் பேசியிருத்தல் ஆகாது என குறிப்பிட்டுள்ளனர்

முஸ்லிம் அரசியல்வாதிகளுடைய நிலைப்பாடும் இதுவாகவே உள்ளது.

அரசியல் செய்வதற்கு தாங்கள் இருக்கையில், றிஸ்வி முப்தி குத்பா பிரசங்கத்தை அரசியல் மயப்படுத்தி, ஜனாதிபதிக்கு சாதகமாக செயற்பட்டதாக முஸ்லிம் அரசியல்வாதிகள் தரப்பில் குற்றம் சுமத்தபட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் றிஸ்வி தனியார் ஊடகம் ஒன்றுக்கு தகவல் வழங்குகையில்

எமக்கு எவரும் அச்சுறுத்தல் விடுக்கவில்லை. நாங்களும் யாரையும் அச்சுறுத்தவில்லை. என் மகளுக்கு, இவருக்குத்தான் வாக்களிக்க வேண்டுமென்று சொல்வதற்கு என்னால் முடியாது. எனது ஜும்ஆ உரை தூர நோக்குடையது. அரசியல் கலப்பற்றது என நோக்கினால், அப்படியே உங்களுக்கு புலப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.