மத்திய கிழக்கு நாடுகளான குவைத் மற்றும் பஹ்ரைனிலும் முதன்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு!கொவிட் 19 புதிய கொரோனா வைரஸ் தொற்று பல உயிர்களை காவு வாங்கியுள்ளதோடு சீனாவுக்கு வெளியில் இந்த வைரஸ் தீவிரம் அடைந்துள்ளது.

இந்நிலையில், குவைத் மற்றும் பஹ்ரைன் நாடுகளும் தங்களது முதல் கொரோனா வைரஸ் தொற்றுகளை உறுதிப்படுத்தியுள்ளன. பஹ்ரைனில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குவைத்தில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறித்த கொவிட் 19 வைரஸ் நோய் தொற்றுக்குள்ளானவர்கள் ஈரானிலிருந்து வந்தவர்கள் என்றும் கூறியுள்ளார்கள்.

குவைத்தில் நோய் தொற்றுக்குள்ளானவர்கள் மூவரும் கடந்த வாரம் ஈரானிய நகரமான மஷாத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட 700 பேரை பரிசோதணை செய்த போதே கண்டறியப்பட்டதாக குவைத் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து "ஈரானிய நகரமான மஷாத்தில் இருந்து வருபவர்கள் மீது நடத்தப்பட்ட சோதனைகளில் கொவிட் 19 வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது" என்று குவைத் அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த மூன்று நோயாளிகளில் 53 வயதான குவைத் நபர், 61 வயதான சவூதி பிரஜை மற்றும் 21 வயதான அரபு பிரஜையும் அடங்குவர் .

இந்த மூவரும் சுகாதார அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றஎன்று அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.

இந்நிலையில், பஹ்ரைனின் சுகாதார அமைச்சகம் இன்று நாட்டின் முதல் கொவிட் 19 தொற்று சம்பவத்தை பதிவு செய்தது. இது ஈரானில் இருந்து வந்த பிரஜை நோய் அறிகுறிகளின் அடிப்படையில் வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

குறித்த நோயாளி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு நோய்த்தொற்று தொடர்பாக உடனடி பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டதாக அமைச்சகம் கூறியுள்ளது.

ஈரானின் உறுதிப்படுத்தப்பட்ட இறப்பு எண்ணிக்கை திங்களன்று 12 ஆக உயர்ந்தது, வெடித்தது அருகிலுள்ள நாடுகளின் பயணத் தடைகளைத் விதித்துள்ளது

இந்த சூழ்நிலையில், தென்கொரியா மற்றொரு சீன நாடாக மாறி வருகிறது. அந்நாட்டில் கொவைட் 19 தொற்று மேலும் 161 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கை 763 ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டில், இதுவரை கொரோனா வைரசால் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 150 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அந்நாட்டில் இதுவரை மொத்தம் 2, 592 பேர் கொவைட் 19 வைரஸ் தாக்குதலில் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.