மஹிந்த தலைமையில் கூடிய ஹஜ் குழுவினர்கள் நேற்று எடுத்த அதி முக்கிய தீர்மானங்கள்...

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஹஜ் குழுவினர்கள் மற்றும் ஹஜ் முகவர்களுக்கிடையே நேற்று -14- அலரிமாளிகைளில் இடம்பெற்ற பேச்சு வார்த்தையில் முகவர் மூலமாக ஹஜ் கடமையை நிறைவேற்ற தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஹஜ் குழுவின் ஊடகப் பேச்சாளர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.

நேற்று பிற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஹஜ் குழுவினர்கள், முகவர் சங்கங்களின் பிரநிதிகளுக்கிடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையின் போது இணக்கப்பாடு எட்டியுள்ளதாக ஹஜ் குழுவின் ஊடகப் பேச்சாளர் அப்துல் சத்தார் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ,

இதன் போது ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்வதற்காக மூன்று வகையில் கட்டணம் அறவிடுவதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. முதலாவது கட்டணப் பொதி ஒருவரிடம் இருந்து ரூபா 575000 என்ற வகையிலும் இரண்டாவது கட்டணப் பொதி ரூபா 650000 என்ற வகையிலும் மூன்றாவது கட்டணப் பொதி ரூபா 750000 என்ற வகையிலும் கட்டணங்கள் அறவிடப்படவுள்ளன.

ஹஜ் முகவர்கள் முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மூலமாக வழக்கம் போன்று செயற்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.