ராஜகிரிய-புத்தகமுவ பாதையின் சதுப்பு நில பகுதியொன்றில் தீ பரவல் ஏற்ப்டடள்ளது. குறித்த தீயை கட்டுப்படுத்துவதற்கு பெல் 212 வகை இராணுவ உலங்கு வானூர்தி பயன்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் கிஹான் செனவிரத்ன தெரிவித்தார்.
இன்று மதியம் குறித்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
அத்துடம் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு கோட்டை மாநகர சபையின் நான்கு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இருப்பினும், குறித்த பகுதிக்கு தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து, விமான படையின் உதவி பெறப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
Post a Comment