ஹஜ் கடமை என்ற போர்வையில் முஸ்லிம்களை வைத்து வியாபாரம் செய்யும் முகவர்கள் விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த பணிப்புரையை பிரதமர் தமக்கு விடுத்துள்ளதாக ஹஜ் குழுத்தலைவர் மர்ஜான் பளீல் தெரிவித்தார்.
ஹஜ் விவகாரம் தொடர்பில் நேற்று இடம்பெற்ற முக்கிய சந்திப்பொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன் இம்முறை ஹஜ் கடமையை பிரதமரின் நேரடி வழிகாட்டலின் கீழ் வழிநடாத்த திட்டமிட்டுள்ளோம்.
மேலும் அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் ஹஜ் கடமையை நிறைவேற்ற சந்தர்ப்பம் வழங்குமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment