பாடசாலைகளின் முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.
இதற்கமைய முதலாம் தவணையின் போது பாடசாலைகளில் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்காக அதிக காலம் வழங்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கல்வி அமைச்சு கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது.
பாடசாலைகளில் முதலாம் தவணை பரீட்சைகளை இடைநிறுத்துவது தொடர்பில் நிபுணத்துவ குழுவின் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
குறித்த குழுவில் கல்வி நிபுணர்கள், பேராசியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களும் அடங்கியுள்ளனர்.
இந்த குழுவின் பரிந்துரைக்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு செல்லவுள்ளதாக கல்வி அமைச்சின் உயர் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment