பின்வாங்கினார் ரணில்! இதயத்தை கைவிட்டார் சஜித்!

பொதுத்தேர்தலில் போட்டியிடவேண்டிய சின்னம் தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சிக்குள் ஏற்பட்டிருந்த மோதல் நேற்று மாலையுடன் நிறைவுக்கு வந்தது.

அந்தவகையில் பொதுத்தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிட ரணில் மற்றும் சஜித் அணியினர் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் இதயச் சின்னத்தில் போட்டியிட எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிய நிலையில் அதனை நிராகரித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அணி, யானைச் சின்னத்தை கோரியதால் பல நெருக்கடிக்கு ஐக்கிய தேசிய முன்னணியினர் தள்ளப்பட்டனர்.

எனினும் இந்த சின்னம் விவகாரம் குறித்து முடிவு செய்ய 10 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு நேற்று கூடியபோது ஜனாதிபதி தேர்தலில் போன்று நாடாளுமன்ற தேர்தலிலும் அன்னம் சின்னத்தில் போட்டியிட இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் நாளை மறுநாள் திங்கட்கிழமை இறுதிச் சின்னம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.