77000 பேருக்கு கொரோனா - சீனா எடுத்துள்ள அவசர முடிவு

கடந்த 60 நாட்களுக்கு அதிகமாக உலக வாழ் மக்களையே பீதிக்குள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த சீன அரசாங்கம் புதிய தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

குறித்த வைரஸ் தொற்றானது வன விலங்குகளிலிருந்து பரவியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆனால் சீனர்களோ வன விலங்குகளை உணவாக உட்கொள்ளும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

ஆகையினால் சீனாவில் வனவிலங்குகளை விற்பனை செய்வதை முழுமையாக தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உயர்மட்ட குழு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இதேவேளை சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வர இலங்கை வௌிவிவகார அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலகலாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 77,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் சீனாவில் மாத்திரம் இதுவரை 2592 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.