திடீரென நாவலபிட்டியை சுற்றிவளைத்த காவல் துறை...! 12 பேர் கைது...!

நாவலபிட்டியில் சட்டவிரோத போதை பொருட்களை விற்பனை செய்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர் என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாவலபிட்டி காவல் துறை பிரிவிற்கு பகுதிகளில் அபாயகரமான போதை பொருள் பயன்பாட்டினால் இருவர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தினை தொடர்ந்து நாவலபிட்டியில் சட்டவிரோத போதை பொருள் வர்த்தகத்தினை முழுமையாக தடை செய்ய விசாரணைகளை ஆரம்பிக்குமாறு இராஜாங்க அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகேவினால் காவல் துறைக்கு கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கைக்கு அமைய இன்று காலை 7 மணிமுதல் முற்பகல் 11 மணிவரை மத்திய மாகாண பிரதி காவல் துறைமா அதிபர் ரொஷான் பெர்னாண்டோவின் பணிப்புரைக்கு அமைய கம்பளை புசல்லா, குருந்துவத்த கலஹா நவலபிட்டி ஆகிய காவல் நிலையங்களில் கடமையாற்றும் 150 உத்தியோகத்தர்களை கொண்டு மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போதே குறித்த 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதோடு அவர்களை நீதிமன்றில் முன்னிலை படுத்தவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.