எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நள்ளிரவு 12 மணிக்கு மேற்கொள்ளவுள்ள விசேட தீர்மானம்

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேற்கொள்ளவுள்ள விசேட தீர்மானம் இதோ..!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தினால் இன்று நள்ளிரவு 12 மணிக்கு முன்பதாக ஐக்கிய தேசிய முன்னணிக்கு யானை சின்னத்தில் போட்டியிட அனுமதி வழங்காத பட்சத்தில் சஜித் பிரேமதாச அணி இதய சின்னத்தில் போட்டியிடுவோம் என சஜித் அணியினை பிரதிநிதித்துவ படுத்தும் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணியினால் கொழும்பில் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் இந்த கருத்தினை வௌியிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் உருவாக்கப்பட்டுள்ள புதிய அணிக்கு யானை சின்னம் அவசியம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் இதுவரை அதற்கு உரிய பதிலினை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.