கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கிய விமானம் - இருவர் சடலங்களாக மாறிய சோகம்..!

சவூதி- ஜித்தாவிலிருந்து இந்தோனேசியா நோக்கி சென்ற இந்தோனேசிய லயன் எயார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ 330 விமானத்தில் பயணம் செய்த இரண்டு நபர்கள் திடீரென உடல்நலக் குறைவால் மரணமடைந்ததை தொடர்ந்து குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

285 பயணிகளை ஏற்றிச் சென்ற மேற்படி விமானத்தில் 77 வயதுடைய பெண் மற்றும் 64 வயதுடைய ஆணொருவருக்கும் விமானத்தில் வைத்து சுகயீனம் ஏற்பட்டு உடல்நலக் குறைவால் அவதியுற்றுள்ளனர்.

இதனையடுத்து விமானம் அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதோடு அவர்களை விமான நிலைய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக விமான நிலைய வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்வானது விமானத்தில் பயணித்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேற்படி உயிரிழந்த இருவரும் இந்தோனேசிய நாட்டவர்கள் என்பதோடு, இருவரின் சடலங்களும் தற்போது காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.