வைத்தியர் ஷாபி தொடர்பில் நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு

குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியராக கடமையாற்றிய ஷாபி சிஹாப்தீனுக்கு எதிரான வழக்கில் இன்று பயங்கரவாதி சஹ்ரானின் பெயரால் பெரிதும் சர்ர்சை ஏற்பட்டது.

இன்றைய தினம் குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் வைத்தியர் ஷாபிக்கு எதிரான வழக்கு நீதிவான் சம்பத் ஹேவாவசம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது கருத்தடை விவகாரத்தில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் தாய்மார்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சாணக , சந்தேக நபரான ஷாபியை லாபிர் எனும் நபரொருவருடன் தொடர்புபடுத்தி முன்வைத்த கருத்தால் இந்த சர்ச்சை ஏற்பட்டது.

'கனம் நீதிவான் அவர்களே !இவ்வழக்கின் ஆரம்பத்தில், இந்த சந்தேக நபர் (ஷாபி) லாபிர் என்னும் சந்தேக நபருடன் தோன்றும் புகைப்படத்துடன் கூடிய இறுவெட்டொன்று சி.ஐ.டி.யிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அந்த லாபிர் எனும் நபர் பயங்கரவாதி சஹ்ரானுடன் சத்தியப்பிரமாணம் செய்தவர். அது குறித்து எந்த விசாரணையும் இல்லை. அந்த பின்னணியில் பங்கரவாத தடைச் சட்டம் ஷாபி விடயத்தில் நீக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

எனினும் இதன்போது வைத்தியர் ஷாபியின் சட்டதரணிகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி நவரட்ன பண்டார இது கருத்தடை விவகாரம் குறித்த தாய்மார்களின் வழக்கு. பாதிக்கப்பட்டோர் தாய்மாரா? சஹ்ரானா? என கேள்வி எழுப்பினர்.

கடும் தொனியில் ஒரே நேரத்தில் இக்கருத்துக்கள் பரிமாறப்பட்ட நிலையில் மன்றில் பெரும் சர்ச்சை மற்றும் பரபரப்பு ஏற்பட்டதுடன் சிறிது நேரத்தில் நீதிவான் சிறிது நேரம் அமைதிகாத்து நிலைமையை சரி செய்தார்.

இதையடுத்து குருநாகல் வைத்தியர் மொஹமட் சிஹாப்தீன் ஷாபியின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட சிசிரிவி காட்சிகளை குற்றவியல் புலனாய்வுத் துறையிடம் ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்பு ஒப்படைக்க குருநாகல் நீதிவான் சம்பத் ஹேவாசம் இன்று உத்தரவிட்டுள்ளார்.

சட்டவிரோதமாக பணம் சம்பாதித்தது, பயங்கரவாதத்திற்கு உதவியது மற்றும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்ததாக கடந்தகாலங்களில் வைத்தியர் ஷாபி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு மே 24 ஆம் திகதி ஷாபியை பொலிசார் கைது செய்தபோது, ​​அவரின் இல்லத்தில் நிறுவப்பட்ட சிசிடிவி கமரா அமைப்பு குருநாகல் பொலிசாரால் எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அதனை சிஐடியிடம் ஒப்படைக்க இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் மருத்துவமனையின் 76 மருத்துவர்கள் மற்றும் தாதியர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றவியல் புலனாய்வுத் துறை இன்று நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.

அத்துடன் விசாரணைகள் மேற்கொள்ள இரண்டு மாத அவகாசம் வழங்குமாறு குற்றவியல் புலனாய்வுத் துறை நீதிமன்றத்திடம் கோரிய நிலையில் வழக்கு மார்ச் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதேவேளை வைத்தியர் க்ஷாபி மீதான இன்றைய வழக்கு விசாரணையை அவதானிக்க அத்துரலிய ரத்ன தேரரும் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.