மூன்றாம் உலகப் போர்! – உலக அளவில் ஏற்பட்டுள்ள கலக்கம்!

ஈரானிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பதட்டநிலை அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து கூகுள் தேடுபொறியில் மூன்றாம் உலகப் போர் குறித்து தேடுபவர்களின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்துள்ளது.

ஈரானின் இராணுவத் தளபதி அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்தே மூன்றாம் உலகப் போர் என்ற கலக்கம் ஏற்பட்டுள்ளதே இதற்கான காரணம் எனச் சொல்லப்படுகிறது.

அதுவும், இன்று காலை ஈராக்கில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் மேற்கொண்ட தோடர் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து சமூக ஊடங்களில் மூன்றாம் உலகப் போர் தொடர்பான விடயங்கள் குறித்த ஆர்வம் அதிகமாகக் காணப்பட்டது.

அதேவேளை ஈரானுடன் யுத்தம் வேண்டாம் என்ற ருவிற்றர் ஹாஸ்டாக் பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. பலர் இரண்டாம் உலக யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளையும் மத்திய கிழக்கில் மோதல்களினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களையும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.