இலங்கை போக்குவரத்து சபையின் அதிரடி அறிவித்தல்...

போக்குவரத்து நடவடிக்கைகளுக்குப் பொருத்தமற்ற அனைத்து பஸ்களையும் சேவையிலிருந்து நீக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.

பெருந்தோட்டப் பகுதிகளில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பழைய பஸ்கள் தொடர்பில் ஆராயுமாறு இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பழுதுபார்த்து மீண்டும் சேவையில் ஈடுபடுத்தக்கூடிய பஸ்களை மாத்திரம் போக்குவரத்தில் ஈடுபடுத்துமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, இலங்கை போக்குவரத்து சபைக்குரிய அனைத்து பஸ்கள் தொடர்பிலும் தற்போது ஆராயப்படுவதாக கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.