இன்று இரவு வானில் தோன்றயுள்ள அதிசய நிகழ்வு... காணத்தவராதீர்கள்...

கடந்த ஆண்டு டிசம்பர் 26 அன்று சூரியனின் ” நெருப்பு வளைய சூரிய கிரகணம் ” வந்து முடிந்த நிலையில், சரியாக இரண்டு வாரங்களுக்குப் பின்னர் " பெனும்பிரல் சந்திர கிரகணம் " எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி நிகழ இருக்கிறது.

இது, 2020 ஆம் ஆண்டுக்கான முதல் சந்திர கிரகணமாகும்.

சந்திர கிரகணம் என்பது நிலாவின் மீது படுகின்ற சூரிய வெளிச்சத்தை பூமியின் நிழல் மறைப்பதால் உருவாவது தான் சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. 

சந்திர கிரகணத்தில் முழு சந்திர கிரகணம், பகுதி சந்திர கிரகணம், தெளிவற்ற சந்திர கிரகணம் என மொத்தம் மூன்று வகைகள் இருக்கின்றன.

இந்த வருடம் ஜனவரி 10 ஆம் திகதி தோன்றப் போகிற சந்திர கிரகணம் இலங்கை நேரப்படி, இரவு சுமார் 10.37 மணிக்கு ஆரம்பிக்கிற கிரகணம் கிட்டதட்ட அதிகாலை 2.42 மணி வரை நீடிக்கிறது.

இந்த 4 மணி நேர இடைவெளிக்குள் கிட்டதட்ட 90 சதவீத நிலவின் பரப்பு பூமியின் நிழலால் மறைக்கப்பட்டு, வெளிவட்டப் பாதை மட்டும் நிழல் போலத் தோன்றும்.

அதனால் தான் இந்த வருடத்தின் முதல் சந்திர கிரகணமான இது முழுமையில்லாத தெளிவற்ற கிரகணமாக இருக்கும்.

குறிப்பாக ஆரம்ப மற்றும் இறுதிக் கட்டங்களில் பெனும்பிரல் கிரகணங்களைக் கவனிப்பது கடினம்.

இந்த சந்திர கிரகண நிகழ்விற்கு நாசா ‘ஓநாய் சந்திர கிரகணம்’ என பெயரிட்டுள்ளது.

ஐரோப்பா, ஆசியா, அவுஸ்திரேலியா, ஆபிரிக்கா, வட அமெரிக்காவின் பெரும்பகுதி, தென் அமெரிக்காவில் கிழக்கு, பசிபிக், அத்திலாந்திக், இந்தியப் பெருங்கடல், ஆர்டிக் ஆகிய நாடுகளில் இந்த சந்திர கிரகணத்தைப் பார்க்க முடியும்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.