சிரேஷ்ட வானொலிக் குரல் இறையடி சேர்ந்தது.

சிரேஷ்ட அறிவிப்பாளரும், ஊடகவியலாளருமான அல்.ஹாஜ் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி தனது 60ஆவது வயதில் காலமானார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் . கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் நேற்றிரவு அவர் காலமானார்.

கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் கல்வி பயின்று, குண்டசாலை விவசாயக் கல்லூரியில் டிப்ளோமா பெற்ற புகழ்பெற்ற விஞ்ஞானப் பாட ஆசிரியராவார்.

களுத்துளை ஜீலான் மத்திய கல்லூரி, தொட்டவத்தை அல் பஹ்ரியா பாடசாலை ஆகியவற்றில் அதிபராகவும் இவர் கடைமயாற்றினார். நாடுதழுவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பத்து அதிபர்களில் இவரும் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இலங்கை வானொலியில் அல்லியின் ஹலோ உங்கள் விருப்பம், பாஹிமின் பரவசப் பயணம், அறிவுக் களஞ்சியம் போன்ற நிகழ்ச்சிகள் வாயிலாக நேயர்களின் விருப்பத்துக்குரிய அறிவிப்பாளராக திகழ்ந்த ஏ.ஆர்.எம்.ஜிப்ரி, நாடுதழுவிய ரீதியில் பொது அறிவு, விஞ்ஞானம் சார்ந்த விடயங்களை போதிப்பவராகவும் இருந்து வந்தார். வானொலியின் சிறந்த செய்தி வாசிப்பாளராகவும் இவர் மக்கள் மனதில் இடம்பிடித்தவராவார்.

இலங்கை ருபவாஹினிக் கூட்டுத்தாபனத்திலும் நீண்டகாலம் செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி முன்வைப்பாளராகவும் இவர் கடமையாற்றியுள்ளார். இது தவிர பத்திரிகைத் துறையிலும் இவர் தனது பங்களிப்பை வழங்கினார்.

அண்ணாரின் ஜனாஸா  இன்று மஃரிப் தொழுகையின் பின்னர் சாய்ந்தமருது அக்பர் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அண்ணாரின் சகலபாவங்களையும் மண்ணித்து அழ்ழாஹ் அவருக்கு உயர் சுவனம் வழங்க பிரார்த்திப்போம்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.