மேலதிக வகுப்பு தொடர்பில் கவனம் செலுத்தவுள்ள அரசாங்கம்!

நாட்டில் அனைத்து மாணவர்களுக்கும் முறையான கல்வி வசதியினை ஏற்படுத்துவதற்காக உயர் கல்வி அமைச்சர் என்ற ரீதியில் தானும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் விசேட கவனம் செலுத்தியிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதனூடாக தகுதி குறைவான சிலரினால் நடத்தப்பட்டு வரும் மேலதிக வகுப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர், தகுதியற்றவர்களினால் நடத்தப்பட்டு வரும் மேலதிக வகுப்புக்கள் தொடர்பாக கேட்ட கேள்விக்கே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

நாட்டில் மாணவர்களின் கல்விக்காக நடத்தப்படும் மேலதிக வகுப்புக்கள் மூலம் 5 பில்லியன் ரூபா பணப் பரிமாற்றம் இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டிய ஊடகவியலாளர், இது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதில் வழங்கிய அமைச்சர் ,சகல மாணவர்களுக்கும் முறையான கல்வியை வழங்குவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கையின் மூலம் 1000 மும்மொழி தேசிய பாடசாலைகள் அமைக்கப்படவுள்ளதாகவும், பிரதேசங்கள் தோறும் அமைக்கப்படும் இவ்வாறான பாடசாலைகள் மூலம் முறையான கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் இந்த பிரச்சினை முடிவுக்கு எடுக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை இந்த சந்திப்பில் அமைச்சரவை இணை ஊடக பேச்சாளர் ரமேஸ் பத்திரண மற்றும் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.