ஐ.தே.கா வின் புதிய தலைவர் யார்?.... இறுதித் தீர்மானம்....


கட்சி தலைமைத்துவவம் தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்வதற்காக நேற்று கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் தீர்மானமின்றி நிறைவடைந்தது.

இந்த நிலையில், கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ மற்றும் கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையில் எதிர்வரும் திங்கட்கிழமை சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று மாலை தலைவர் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பமானது.

சுமார் 3 மணி நேரம் வரை இடம்பெற்ற அந்தக் கூட்டத்தில் தலைமைத்துவம் தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை.

இதையடுத்து, கட்சித் தலைமையகத்திலிருந்து வெளியேறிய சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களிடம் கருத்து எதனையும் தெரிவிக்காமல் சென்றனர்.

இந்த நிலையில், ஊடகங்களிடம் கருத்த தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஸிம், கட்சியின் தலைமைத்துவம் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆராயப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்க கூட்டத்திலிருந்து வெளியேறியதன் பின்னர், உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

அதன் பின்னர், ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, குறித்த சந்தர்ப்பத்திலிருந்த சுமார் 52 உறுப்பினர்களில் 90 வீதமானோர், சஜித் பிரேமதாஸவுக்கு கடசித் தலைவராக வேண்டும் என விருப்பம் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறிருப்பினும், அவ்வாறு முறையான விடயங்கள் எதுவும் இடம்பெறவில்லை என ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த கட்சியின் செயலாளரான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அங்கு சில உறுப்பினர்கள் மாத்திரம் வாக்கெடுப்பை நடத்துவது தவறானதாகும்.

எனவே, அடுத்தவாரம் கட்சித் தலைமை தொடர்பில் அடுத்த வெள்ளிக்கழமை இறுதித் தீர்மானம் மேற்கொள்ள இணங்கப்பட்டுள்ளதாக அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.