பள்ளிவாசல் வளாகத்தில் திடீரென முளைத்த, புத்தர் சிலையை அகற்றாதிருக்க தீர்மானம்

கொழும்பு – கண்டி வீதியில் நெலுந்தெனிய உடுகும்பு­றவில் அமைந்துள்ள நூர் ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் இர­வோடிரவாக புத்தர் சிலையொன்று வைக்கப்பட்ட விவகாரம் வரக்காபொல நீதிவான் நீதிமன்றத்தில் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

அங்கு வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றுவதில்லை­யெனவும் பள்ளிவாசல் வளாகத்துக்கும் புத்தர்சிலைக்குமி­டையில் மதில் ஒன்றினை அமைத்துக் கொள்வதற்கும் முஸ்­லிம்கள் இணக்கம் தெரிவித்தனர்.

முஸ்லிம்கள் தாம் நீண்டகாலம் பெரும்பான்மை இனத்தவருடன் ஒற்றுமையாக வாழ்வதாகவும் இவ்விவகாரத்தினால் பிரச்சினைகள் உருவாகுவதை விரும்­பவில்லை எனவும் தெரிவித்தனர்.

அதற்கிணங்க புத்தர் சிலை அவ்விடத்திலிருந்தும் அகற்றப்பட­மாட்டாது. புத்தர் சிலைக்கும் பள்ளிவாசல் வளாகத்துக்கு­மிடையில் மதில் ஒன்று நிர்மாணிக்கப்படும் என வரக்காபொல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பாக கடந்த புதன்கிழமை நூர்ஜும்ஆ பள்­ளிவாசல் தலைவர் உட்பட நிர்வாகிகள், அப்பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர்கள் உட்பட முஸ்லிம்கள், மாற்றுத் தரப்பின் சார்பில் அப்பகுதியைச் சேர்ந்த தலைமை பெளத்த குரு உட்­பட பெரும்பான்மைச் சமூகத்தினர் வரக்காபொல நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

நீதிமன்றில் இரு தரப்பினரும் இவ்விவகாரத்தை சுமுகமாகத் தீர்த்துக்கொள்வதெனவும், புத்தர் சிலையை அகற்றுவ­தில்லை எனவும் இணக்கப்பாட்டுக்கு வந்தனர். முஸ்லிம்கள் பொறுமை காத்து இணக்கப்பாட்டுக்கு வந்து பெரும்­பான்மைச் சமூகத்தின் உணர்வுகளுக்கு இடமளித்தமைக்கு வரக்காபொல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நன்றி­களைத் தெரிவித்தார்.

இச்சம்பவம் கடந்த 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதி­காலை 2 மணிக்கு இடம்பெற்றது. புத்தர் சிலை வைக்கப்பட்ட­தையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை நிலவியது. வரக்கா­பொல மற்றும் கேகாலை பொலிஸார் அங்கு பாதுகாப்பு கட­மைகளை முன்னெடுத்தனர்.

இரு தரப்பினருக்கும் இடையில் இணக்கப்பாடொன்றினை ஏற்ப­டுத்தி பிரச்சினையை சுமுகமாக தீரப்பதற்கு பொலிஸார் முயற்சித்தபோதும் அது பலனளிக்கவில்லை. பெரும்பான்மை சமூகத்தினர் புத்தர் சிலையை அங்கிருந்து அகற்றிக்கொள்வ­தற்கு மறுப்புத் தெரிவித்தனர். இதனையடுத்தே வரக்காபொல பொலிஸார் இவ்விவகாரத்தை நீதிமன்றம் மூலம் தீர்த்துக்கொள்வதற்குத் தீர்மானித்தனர்.

வரக்காபொல நீதிவான் நீதிமன்றம் கடந்த 8 ஆம் திகதி இரு தரப்பினரையும் ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நீதிவான் மேலதிக விசாரணையை ஜூலை 15 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.