மேற்கத்தைய உடையுடன் அக்குராசன உரை நிகழ்த்திய இலங்கையின் முதல் ஜனாதிபதி!

8ஆவது நாடாளுமன்றத்தின் 4 வது கூட்டத்தொடர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று காலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

காலை 10 மணிக்கு சபா மண்டபத்துக்கு சமூகமளித்த ஜனாதிபதி கோட்டாபய , பிரதான ஆசனத்தில் அமர்ந்தார்.

அதனையடுத்து, அரசியலமைப்பின் 33 (2) ஆவது பிரிவில் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கு அமைய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தினார்

இந்த நிலையில் இலங்கையின் நாடாளுமன்ற வரவாற்றில், முன்னாள் ஜனாதிபதிகளான, ஜே.ஆர்.ஜெயவரத்தன. ரணசிஙக் பிரமேதாச, டி.பி.விஜயதுங்க, மஹிந்த ராஜபக்ச,மைத்திரிபால சிறிசேன ஆகியோர் தேசிய உடையுடனேயே நாடாளுமன்ற உரைகளை ஆற்றியுள்ளனர்.

ஆனால், இதில் விதி விலக்கானார் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய மேற்கத்தைய ஆடையுடன் அக்குராசன உரையினை நிகழ்த்தினார்.

மேலும் இன்றைய கன்னி உரையில் தற்போது இருக்கின்ற அரசியலமைப்பில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கை நாடாளுமன்றில் மேற்கத்தைய ஆடையுடன் சிம்மாச உரையாற்றும் முதல் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது சபாநாயகர் கரு ஜெயசூரிய எதிர்க்கட்சி தலைவராக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச உத்தியோகப்பூர்வமாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சாவின் வெற்றிடத்திற்கு வருண பிரியந்த லியனகே சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதையடுத்து எதிர்வரும் 7 ஆம் திகதி பிற்பகல் ஒரு மணிவரை பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் சபாநாயகர்  கரு ஜயசூரியவினால் ஒத்திவைக்கப்பட்டது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.