சற்று நேரத்தில் எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஆரம்பம்...

எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று முற்பகல் 10 மணியளவில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி அடைந்துள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று முற்பகல் 9 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகையும் பின்னர் சபாநாயகரின் வருகையும் இடம்பெறும்.

இதனையடுத்து படிக்கட்டு வரிசையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற செயலாளரினால் வரவேற்பு வழங்கப்படும்.

முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி, நாடாளுமன்ற பிரதான ஆசனத்தில் அமர்ந்ததை அடுத்து அரசியலமைப்பின் 33 ல் இரண்டாம் பிரிவில் அவருக்க வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் உரை நிகழ்த்துவார்.

ஜனாதிபதியின் உரையை அடுத்து சபை அமர்வை பிற்பகல் 1 மணிவரை ஜனாதிபதி தற்காலிகமாக இடைநிறுத்துவார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.