சற்று முன்னர் வெளியான செய்தி...!


பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்னவை பொறுப் பேற்றுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கொழும்பு, நாரேஹன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன இதுவரை க‍ைதுசெய்யப்படவில்லை என்று சட்டமா அதிபர் கொழும்பு நீதிவான் நீதமன்றுக்கு அறிவித்துள்ளார்.

வெள்ளை வேன் விவகார ஊடகவியலாளர் சந்திப்பை மையப்படுத்தி சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக ராஜிதவை க‍ைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதிவான் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு விடுத்த உத்தரவின் கீழ் அவர‍ை கைதுசெய்ய பல்வேறு இடங்களில் நேற்றும் நேற்றுமுன்தினமும் விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந் நிலையிலேயே ராஜித்த சேனாரத்ன நேற்றிரவு நாரேஹன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு வைத்தியப் பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நேற்றைய தினம் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.