சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதியின் திடீர் நடவடிக்கையால் ஏற்பட்ட பதற்றம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

அதற்கமைய அவர் இன்று வேரஹெரவில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கே இவ்வாறு கண்காணிப்பு விஜயமொன்றை தற்போது மேற்கொண்டார்.

இதன்போது ஊழியர்களிடம் கலந்துரையாடிய ஜனாதிபதி, வாகன சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கு வருபவர்கள் குறுகிய நேரத்திலேயே அதனை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அதற்கு ஏற்ற வகையிலான வசதிகளை போக்குவரத்து திணைக்களம் விரைவில் அமுல்படுத்த வேண்டுமெனவும் அவர் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் திடீர் நடவடிக்கையில் அலுவலகத்தில் பதற்றம் ஏற்பட்டதுடன் அதிகாரிகள் வழமையாக செய்து வந்த இழுத்தடிப்புக்களை மக்கள் நேரடியாக ஜனாதிபதியிடம் மறையிட்டமையினால் அதிகாரிகள் மேலும் குழப்பம் அடைந்தமை குறிப்பிடத் தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.