ஹொரவப்பொத்தானயில் கைதான ஒன்பது பேர் பிணையில் விடுதலை

கடந்த ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் சந்தேகத்தின் பேரில் ஹொரவப்பொதான பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 10 நபர்களில் 09 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 21 தாக்குதலை அடுத்த பல்வேறு சந்தேகங்களின் அடிப்படையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கைது செய்யப்பட்ட இவர்களை இன்று கெப்பத்திகொல்லாவ நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து வந்த அறிக்கையில் சந்தேக நபர்களுக்கு எதிராக ICCPR சட்டத்தின் கீழ் வழக்கை கொண்டு நடாத்த போதிய சான்றுகள் இல்லையென்றும் 1வது சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்கும் படி TIDயினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இதேவேளை சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் குழாம் சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்யுமாறும் நீதவானை வேண்டினர்.

இருதரப்பு கருத்துக்களையும் ஆராய்ந்த நீதவான் 1வது சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்கும் படியும் ஏனைய 9 பேரையும் பிணையில் விடுவித்தும் வழக்கை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.