நாட்டு முஸ்லிம்களுக்கு ஓர் மகிழ்சிகர செய்தி....


ஹஜ் கடமையை சாதாரண மக்களும் நிறைவேற்றும் வகையில் ஹஜ் கட்டணங்களை ஒழுங்குபடுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, ஹஜ் குழுத்தலைவர் மர்ஜான் பளீல் தலைமையிலான குழுவினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

களுத்துறை ‘லாயா’ ஹோட்டலில் ஹஜ் குழுவினருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (22) இடம்பெற்றுள்ளது.

இதன்போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். இச்சந்திப்பில் குழு அங்கத்தவர் அஹ்கம் உவைஸும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும் ஹஜ் கடமையை சில முகவர்கள் வியாபாரமாக செய்து வருவதை தடுக்கும் வகையில் அரசாங்கம் புதிய முறையொன்றை இந்தமுறை கையாளவுள்ளது.

கூடுதல் கட்டணங்களை அறவிட்டு மக்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்காமல், குறைந்த கட்டணத்தில் திருப்தியான சேவையை மக்களுக்கு வழங்க வேண்டுமென்பதில் பிரதமர் உறுதியாகவுள்ளார்.

மேலும் ஹஜ் கட்டணத்தை குறைத்து மக்களுக்கு சிறந்த சேவையொன்றை தனது அரசாங்கம் பெற்றுக்கொடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் தனது அதிகாரிகளுக்கு விசேட உத்தரவையும் பிறப்பித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளதாக அரச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.