இன்று முதல் தடை....

பொது மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளில் பாடல்களை ஒலி, ஒளி பரப்புவது இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி அதிக ஒலியில் பாடல்களை ஒலிபரப்புதல் மற்றும் மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் காணொளிகளை ஒளிபரப்புதல் என்பனவும் தடை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொதுமக்களுக்கு ஏதேனும் ஒரு சந்தரப்பத்தில் அசௌகரியம் ஏற்படும் போது 1955 என்ற துரித தொலைப்பேசி இலக்கத்தின் ஊடாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு முறைப்பாடளிக்க முடியும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பேருந்துகளில் ஒலிபரப்பக்கூடிய பொருத்தமான ஆயிரம் பாடல்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.