சற்றுமுன் அபூர்வ நிகழ்வு ஆரம்பம்.... காணத்தவராதீர்கள்

10 வருடங்களுக்குப் பிறகு இலங்கையில் முழுமையான சூரிய கிரகணம் ஒன்றை பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் இன்று ஏற்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் இந்த சூரியகிரகணத்தை தெளிவாக காண முடியும்.

இன்று காலை 8.09க்கு ஆரம்பமாகியுள்ள இந்த சூரிய கிரகணம், 11.25 வரையான 3 மணித்தியாலங்களுக்கு நீடிக்கும்.

இது 3 நிமிடங்கள் மாத்திரம் முழுமையான கிரகணமாக இலங்கைக்கு தென்படும் என்று ஆர்த்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.

சூரிய கிரகணத்தை வெறுங் கண்களாலோ அல்லது வெயிலுக்கு அணிகின்ற கண்ணாடிகளைக் கொண்டோ நேரடியாக பார்ப்பது ஆபத்தானது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கறுப்பு நிறத்திலான எக்ஸ்ரே அட்டை போன்றவற்றைக் கொண்டும் சூரிய கிரகணத்தின் போது சூரியனை நேரடியாக பார்க்க வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே சூரியகிரகணத்தை பார்வையிடுவதற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட கருவிகள் இருப்பின் அவற்றை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற சூரிய கிரகணத்தை 2031 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி பார்வையிட முடியும் என வானியதுறை நிபுணரான பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சூரிய கிரகண அவதானிப்பு முகாம் இன்று யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தருகிலுள்ள மைதானத்திலும், கிளிநொச்சி பொறியியல் பீடத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காலை 7.30 மணியிலிருந்து இந்த நடவடிக்கைகள் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல்துறை சிரேஷ்ட பேராசிரியர் புன்னியமூர்த்தி ரவிராஜன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.