குற்றப் புலனாய்வு பிரிவில் ரத்னதேரர்! சிக்குவாரா ஹிஸ்புல்லா?

மட்டகளப்பு தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும் எனபாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தின தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பல்கலைக்கழகம் தொடர்பில் இதுவரையில் இடம்பெற்றுள்ள விசாரணைகள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்து , விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோருவதற்காக நிதி குற்றப் புலனாய்வு பிரிவிக்கு நேற்று தேரர் சென்றுள்ளார்.

இலவசமாக தொழிநுட்ப கல்வியை வழங்கும் நோக்கில் நிலத்தை பெற்றுக் கொண்ட முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லா , அதனை தற்போது 'பெர்ட்டிகிலோ கெம்பஸ்' மட்டகளப்பு தனியார் பல்கலைக்கழகமாக உருவாக்கியுள்ளதாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதன் ஊடக பல சட்ட மீறல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இலவச தொழிநுட்ப கல்வியை வழங்குவதாக கூறப்பட்டு இந்த பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டாலும் தற்போது கலைப்பீடமாக அதனை மாற்றி இஸ்லாமிய அடிப்படைவாத கல்வியை போதிக்கும் நிலையமாக உருவாக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தை அமைப்பதற்காக சவுதிஆரேபியாவிலிருந்து பெருந்தொகையான நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதிகளை எந்த முறையில் பயன்படுத்தினார்கள் என்பது தொடர்பிலும் இதுவரையில் விளக்கமில்லாமல் உள்ளது.

இந்நிலையில் , இவ்வாறு நிதியை வழங்கிய நிறுவனங்களின் நோக்கம் தொடர்பிலும் ஆராய்ந்து பார்க்கவேண்டும் என்றும், இஸ்லாமிய அடிப்படைவாதத்தை போதிக்கும் எண்ணத்திலேயே சவுதி அரேபியாவிலிருந்து குறித்த நிதி வழங்கப்பட்டிருக்கும் என்றே தாம் கருதுவதாகவும் தேரர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் இந்த விசாரணைகளின் தற்போதைய நிலைகுறித்து ஆராய்வதற்காக நிதி குற்றப் புலனாய்வு பிரிவிக்கு வந்தபோது , இங்கு விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் தற்போது குற்றப் புலனாய்வு பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதாகவும் தேரர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக குற்றப் புலனாய்வு பிரிவிற்கு சென்று விசாரணை அதிகாரிகளை சந்தித்து , ஹிஸ்புல்லா பல்கலைகழக விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கேட்டுக் கொண்டதாகவும் ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.