நீதிமன்ற உத்தரவு மூலம் புத்தர் சிலையை அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை

நேற்று அதிகாலை கொழும்பு - கண்டி பிரதான வீதியில் கேகாலை மாவட்டத்திலுள்ள நெலுந்தெனிய, உடுகும்புற பிரதேச நூர் ஜூம்மா பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்ட விடயம் அறிந்ததே..

புத்தர் சிலையானது பள்ளிவாசலுக்கு சொந்தமான கட்டிடத்திற்கு அருகில் அதிகாலை 2.00 மணியளவில் இனந்தெரியாதோரால் வைக்கப்பட்டு ள்ளது .

இந்நிலையில் இது தொடர்பில் நாம் பள்ளிவாயல் நிர்வாக சபை உறுப்பினர் ஒருவரை சகேதர ஊடகம் ஒன்று தொடர்பு கொண்டு கேட்டபோது,

வைக்கப்பட்ட புத்தர் சிலை இதுவரை அகற்றப்படவில்லை, சிலை வைக்கபட்டது தொடர்பில் போலீசில் நிர்வாகத்தால் முறைப்பாடு செய்யபட்டுள்ளது.

நேற்றில் இருந்து தற்போது வரை குறிப்பிட்ட இடத்திற்கு நூற்றுக்கும் அதிகமான வரக்காபொல, மற்றும் கேகாலை போலீசார் வருகை தந்து இது தொடர்பில் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரதேசத்தில் சொற்ப அளவான முஸ்லிம்களே வாழ்ந்து வருவதால் இப்பிரச்சினை பூதாகரம் ஆகிவிடும் என்ற அச்சத்தில் பள்ளிவாயல் நிர்வாக சபையும் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பதில் தயக்கம் காட்டும் அதே வேளை சட்டரீதியாக செய்யக்கூடிய முன்னெடுப்புகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பில் நீதிமன்று மூலம் தீர்ப்பை பெற்று இதனை அகற்ற முடியும் எனவும் பிரதேசத்திற்கு பொறுப்பான போலீசார் இது தொடர்பில் பள்ளிவாயல் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாக நிர்வாக சபை உறுப்பினர் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.