பாதுகாப்பு அமைச்சினால் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிமுக்கிய அறிவிப்பு

ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் பெயர்களை பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குவதற்காக இலங்கை மக்களுக்கு பல்வேறு தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான அறிவிப்பானது பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளதுடன், குறித்த மோசடிகளில் ஈடுபட்டு வரும் நபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான சந்தேகநபர்களை கண்டறிந்து கடுமையான சட்டநடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுவோர் தொடர்பில் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி தெரிவிக்க முடியும் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தேசபந்து தென்னகோன் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், மேல் மகாணம் - 0718591017

ரவி விஜேகுணவர்தன சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், வடமாகாணம் - 0718591009

எஸ்.எம்.விக்ரமசிங்க சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், மத்திய மாகாணம் - 0718591001

ரொசான் பெர்னாண்டோ சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணம் - 0718591028

நந்தன முனசிங்க சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், வட மத்திய மற்றும் வடமேல் மாகாணம் - 0718591008<

டபிள்யூ.எப்.யூ.பெர்னாண்டோ சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், ஊவா மாகாணம் - 0718591011

லலித் பத்திநாயக்க சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், கிழக்கு மாகாணம் - 0718591985

அதேவேளை கொழும்பு நகரில் இவ்வாறான மோசடிகள் இடம்பெறுமாயின் பின்வரும் இலக்கத்திற்கு அறிவிக்க முடியும்.

பணிப்பாளர் - கொழும்பு மோசடி விசாரணை பிரிவு பொலிஸ் அதிகாரி - டபிள்யூ.எல்.ஜே.ரஸல் டி செய்சா. தொலைப்பேசி இலக்கம் - 0718591736

மேலும் நாட்டில் எந்தவொரு பகுதியில் இவ்வாறான மோசடிகள் இடம்பெற்றால், மற்றும் பொலிஸ்மா அதிபர் கட்டளையிடும் தகவல் பிரிவு - நடவடிக்கைகளுக்கு பொறுப்பான அதிகாரி தொலைப்பேசி இலக்கம் - 011-2854885 போன்ற இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும்.

இதேவேளை, தனது பெயரை கூறிக்கொண்டு மோசடியில் ஈடுபடும் நபர்கள் குறித்து அருகில் இருக்கும் பொலிஸ் நிலையங்களில் உடனடியாக அறிவிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அண்மையில் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.