ஆரம்பமாகின்றது நாடாளுமன்ற அமர்வு! வெளியாகியுள்ள விசேட அறிவித்தல்


நாடாளுமன்ற கூட்டத்தொடர் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட பின்னர், அன்றைய தினமே சபையைக் கூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் எதிர்வரும் ஜனவரி மூன்றாம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்ட பின்னர் அன்றைய தினமே பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையைத் தொடர்ந்து பிற்பகல் 12.30 மணிக்கு ஜனாதிபதி கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்துவதற்கும்¸ அதில் 2020 ஜனவரி 07ம் திகதி முதல் நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றியும் விளக்கமளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (23) பாராளுமன்றத்தில் நடைபெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.

அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என ஆளும் கட்சியை பிரதிநிதித்துவம் செய்தவர்கள், கட்சித் தலைவர்களுக்குத் தெரிவித்தனர்.

அதேநேரம்¸ அன்றையதினம் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்றல்¸ நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகரினால் அறிவிக்கப்படுதல் மற்றும் சபாநாயகரின் அறிவிப்புக்கள் என்பனவும் இடம்பெறும்.

இன்றைய கூட்டத்தில் நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் எதிர்வரும் ஜனவரி 3ம் திகதி ஜனாதிபதியினால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பித்துவைக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வின் நிகழ்ச்சி நிரல் மற்றும் அதற்கான ஏற்பாடுகள் பற்றிய கட்சித் தலைவர்களுக்கு விளக்கம் அளித்தனர்.

இக்கூட்டத்தில் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, ஆளும் கட்சியை பிரநிதித்துவம் செய்து கபினட் அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.