கோட்டாபயவின் பெயரை கூறிய இருவரிற்கு நேர்ந்த கதி ...!


அரச நிறுவனங்களில் தொழில் பெற்றுத் தருவதாக ஏமாற்றி பணம் மோசடி செய்யும் நபர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நெருக்கமான தொடர்பு உள்ளதாக கூறி இந்த மோசடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மோசடிகளுக்கு தொடர்புடைய இருவர் கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜாங்கன யாய பிரதேசத்தை சேர்ந்த நிஹால் தசநாயக்க மற்றும் செவனகல சமகிபுர பிரதேசத்தை சேர்ந்த ஜயகொடி என்பவர்களே இவ்வாறுஎகைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்ற விசாரணை பிரிவு முன்னெடுத்து வருகின்றது.

இதேவேளை, கல்வி அமைச்சரினால் ஆசிரியர் பதவி வழங்கப்படுவதாகவும், இது தொடர்பான மோசடிகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என கல்வி அமைச்சு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மோசடி தொடர்பில் தகவல் இருப்பின் அது தொடர்பில் தகவல் வழங்குமாறு கல்வி அமைச்சு, மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.