புதிய அரசாங்கத்தின் அடுத்த அதிரடி - மகிழ்ச்சியில் நாட்டு மக்கள்


அத்தியாவசிய அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அரசாஙகம் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுக்கும் 5 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

இத்தகவலை தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப அமைச்சகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இத்திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், ஏற்கனவே 2 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த ஒதுக்கீடுகளைத் தெரிவிக்கும் கடிதங்கள் ஏற்கனவே சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்காக அவர்கள் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகளைத் தீர்மானிக்க கிராம சேவகர்கள், சமுர்தி அபிவிருத்தி அலுவலர், பொருளாதார மேம்பாட்டு அலுவலர், கமநலசேவைகள் திணைக்கள அலுவலர் மற்றும் அப்பகுதியின் மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த அபிவிருத்தி நடவடிக்கைகளை ஜனவரி மாதத்திற்குள் தொடங்குவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.