மௌலவிமார்களே உஷார்... உங்கள் ஓர் மகிழ்ச்சிகர செய்தி...

மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்தில் கல்வி அமைச்­ச­ரா­க­வி­ருந்த சுசில் பிரே­ம­ஜ­யந்­த­வுக்குப் பின்னர் இந்­நாட்டில் மௌலவி ஆசி­ரியர் நிய­ம­னங்கள் வழங்­கப்­ப­ட­வில்­லை­யென என்­னிடம் தெரி­விக்­கப்­பட்­டது. மௌலவி ஆசி­ரியர் நிய­மனம் எதிர்­வரும் மாதத்­திற்குள் வழங்­கப்­ப­டு­மென நான் உறு­தி­ய­ளிக்­கிறேன் என்று கல்வி, விளை­யாட்­டுத்­துறை மற்றும் இளைஞர் விவ­கார அமைச்சர் டலஸ் அழ­கப்­பெ­ரும தெரி­வித்தார்.

கடந்த காலங்­களில் தேர்தல் நெருங்­கும்­போது போட்டிப் பரீட்­சைகள் மற்றும் நேர்­முகப் பரீட்சை நடத்­தப்­படும். ஆனால் நிய­ம­னங்கள் வழங்­கப்­ப­டு­வ­தில்லை. இவ்­வா­றான ஒரு கலா­சா­ரமே கடந்த ஆட்­சியில் இடம்­பெற்­றது. இதற்கு முற்­றுப்­புள்ளி வைத்து விரைவில் மௌலவி ஆசி­ரியர் நிய­மனம் வழங்­கப்­படும் என்றும் கல்வி அமைச்சர் மேலும் தெரி­வித்தார்.

வெலி­கம பாரி அரபுக் கல்­லூ­ரியின் 135ஆவது வருட பூர்த்­தி­வி­ழாவில் பிர­தம அதி­தி­யாகக் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.