வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்தி..!


நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழை நாளைய தினம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அனுராதபுரம், பொலனறுவை, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்கில் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு, வட மத்திய, ஊவா, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் பிற்பகல் 2 மணிக்கு பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில். அனுராதபுரம், பொலனறுவை, திருகோணமலை மற்றும் வவுனியா மாவட்டங்களின் பல இடங்களில் 150 தொடக்கம் 200 மில்லிமீற்றர் வரையில் பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல், சபரகமுவ மற்றும் ஊவாக மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை, நுவரெலிய, மாத்தளை, புத்தளம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் 100 தொடக்கம் 150 மில்லிமீற்றர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாகலாம் என்றும் மேற்படி திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென் மாகாணத்திலும் கண்டி, குருநாகல், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியை எதிர்பார்ப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் காற்றின் வேகமானது மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடி, மின்னல் மற்றும் பலத்த காற்று காரணமாக பாதிப்புக்களை தவிர்த்துக்கொள்வதற்கு பொதுமக்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.