அரசாங்க ஊழியர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!


2020ஆம் ஆண்டிற்காக கடமைகளை ஆரம்பிக்கும் அரசாங்க ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதலாம் திகதி விசேட வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரசாங்க பிரதானிகளுக்கு, பொது நிர்வாக அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

அதற்கமைய தேசிய கொடியை உயர்த்தி, தேசிய கீதத்தை பாடுமாறும் இராணுவத்தினர் உட்பட நாட்டுக்காக தியாகம் செய்த அனைவருக்கும் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசாங்க நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களுக்கு தங்களுக்கு வசதியான மொழியில் அரச சேவை உறுதிமொழிகளை வழங்க வேண்டும் என அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

2020ஆம் ஆண்டிற்காக கடமைகளை ஆரம்பிப்பதற்கான பிரதான நிகழ்வு ஜனவரி மாதம் முதலாம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்ளைகளுக்கமைய சேவை செய்யும் நாட்டிற்காக அரச சேவையில் மாற்றம் மேற்கொள்ள வேண்டும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதற்காக அரச ஊழியர்களின் அர்ப்பணிப்பு அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.