கடந்த ஆட்சியின் ஊழல்களை துரிதமாக விசாரிக்க நடவடிக்கை - புதிய அரசாங்கம் அதிரடி

கடந்த ஆட்சியில் இடம்பெற்ற மிகப்பெரிய ஊழல் மோசடிகளுடன் தொடர்புபட்ட அனைத்து நபர்களுக்கு எதிராகவும் விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

அத்துடன் பிரதமர் மற்றும் ஜனாதிபதியிடம் இதற்கான அனுமதியை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவகாரம் மட்டுமே மக்களுக்கு தெரிந்த ஊழலாக இருக்கின்றது. ஆனால் துறைமுக அதிகாரசபையில் இடம்பெற்ற ஊழல், உயர்கல்வி அமைச்சில் இடம்பெற்ற ஊழல், வீடமைப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊழல், சர்வதேச உடன்படிக்கைகளை கையாள்வதில் ஏற்பட்ட ஊழல் என பல ஊழல் சம்பவங்கள் மக்களுக்கு தெரியாதுள்ளது. இவை அனைத்தையும் மீண்டும் விசாரணைக்கு எடுத்து மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்துவோம். இதில் பிரதான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.