பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி - முதலாம் திகதி முதல் பஸ்களில் வரவுள்ள நடைமுறை!

எதிர்வரும் முதலாம் திகதி முதல் தனியார் பஸ்களில், பயணிகளை அசௌரியங்களுக்குள்ளாகும் பாடல்களை ஒலிப்பரப்புவதற்கும், காணொளிகளை ஔிப்பரப்புவதற்கும் தடை விதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தலை அமைச்சர் மஹிந்த அமரவீர தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு வழங்கியுள்ளார்.

அத்துடன் இது குறித்து முறைபாடுகளை 1955 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து, பயணிகள் முறைபாடுகளை முன்வைக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்களின் முறைபாடுகளுக்கு அமைய பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதற்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதனை தவிர, தனியார் பஸ்கள் அல்லது இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள், மந்த கதியில் பயணிக்குமாயின் அது தொடர்பிலும் பயணிகள் முறைபாடுகளை முன்வைக்க முடியும் எனவும் கூறப்படுள்ளது.

பஸ் சாரதிகள் கவனயீனமாக அல்லது சட்டவிரோதமாக பயணிப்பாராயின், அல்லது பஸ் நடத்துனர்கள் பயணிகள் அசௌகரியங்களுக்குள்ளாகும் வகையில் செயற்படும் பட்சத்தில் அது குறித்தும் குறித்த தொலைபேசி இலக்கத்தில் பயணிகள் முறையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அனைத்து பஸ்களிலும் ஒலிப்பரப்புவதற்கு ஏற்ற வகையில் ஆயிரம் பாடல்கள் அடங்கிய தொகுப்பினை அறிமுகப்படுத்துவதற்கு போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதனை பஸ் சாரதிகளுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் நாளைய தினம் மாக்கும்புர பஹுவிட போக்குவரத்து மத்திய நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன.

மேலும் எதிர்வரும் முதலாம் திகதியின் பின்னர், பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகாத வகையில் அந்த பாடல்களை மாத்திரம் ஔிப்பரப்ப முடியும் என பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.