இலங்கை தொடர்பில் கூகுள் வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்....!


கூகுள் தேடுபொறியில் இலங்கையின் அமைவிடம் தொடர்பிலேயே 2019 ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்டுள்ளதாக, கூகுள் தேடுகைக்கான புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கமைய, கூகுள் தேடுபொறி ஊடாக ‘Where is’ என்ற பிரிவின் கீழ், ‘Where is Sri Lanka’ என்ற தேடுகை முதலிடம் பெற்றுள்ளது.

இதற்கமைய, உலக வரைபடத்தில் இலங்கை எங்கு அமைந்துள்ளது என அதிகளவானவர்கள் தேடியுள்ளனர்.

இலங்கை எங்குள்ளது என ஏப்ரல், மே மாதங்களில் அதிகம் தேடப்பட்டுள்ளதாக புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக பிரசித்தி பெற்ற பயண வழிகாட்டியான Lonely Planet-இல், சுற்றுலா செல்வதற்கான சிறந்த நாடுகளின் பட்டியலில் இந்த வருடத்தில் இலங்கை முதலிடம் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன், ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் உலகின் கவனம் இலங்கை மீது ஈர்க்கப்பட்டதுடன், தாக்குதலின் பின்னர் அது தொடர்பில் கவனம் செலுத்திய வௌிநாட்டவர்கள் இலங்கை குறித்தும் அந்தத் தாக்குதல் தொடர்பிலும் தேடியுள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.