ரஞ்சன் ராமநாயக்கவின் உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் இதோ..!

2019ஆம் ஆண்டுக்கான க.பொ.தர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றிரவு வெளியிடப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் 8ஆம் திகதி தொடங்கிய மேற்படி பரீட்சைக்கு 37 ஆயிரத்து 704 பேர் தோற்றியிருந்தனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவும் குறித்த பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வெளிவந்துள்ள பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், ரஞ்சன் ராமநாயக்க அரசறிவியலில் S, தொடர்பாடல் மற்றும் ஊடகக் கல்வியில் S பெற்றுள்ளதோடு ஆங்கிலத்தில் அவர் A சித்தி பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.

இருப்பினும் அவர் கிறிஸ்தவ பாடத்தில் (F) தேர்ச்சியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.