ஐ.தே.க வின் பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு....


கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அடுத்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி தலைமையகத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் இவ்வாறு கூறினார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றம் மீண்டும் கூடும்போது எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்ட பின்னர் கட்சியின் தலைமைத்துவத்திலும் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை மாற்றுவதில் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.