சீரற்ற வானிலை காரணமாக 7 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்பு

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 13 மாவட்டங்களிலுள்ள 7 ஆயிரத்து 565 குடும்பங்களை சேர்ந்த 26 ஆயிரத்து 492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் 90 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்து நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 84 வீத வரை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

மேலும் பிரதான ஆறுகளை அண்மித்து வாழும் மக்கள் அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

மாத்தளை, நுவரெலியா, பதுளை, கண்டி, மொனராகலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மாத்தளை, நுவரெலியா, பதுளை, கண்டி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு நேற்று விடுக்கப்பட்ட சிவப்பு மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று பிற்பகல் 4 மணி வரை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதிக மழை பெய்யும் சந்தரப்பங்களில் குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை மட்டகளப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான தற்காலிக வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக மட்டகளப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.