பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு கொண்ட சுனாமி பேரலை ஏற்பட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் பூர்த்தி

2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி என்பது இலங்கையில் மாத்திரமல்ல, உலகத்தில் யாராலும் மறக்க முடியாதவொரு நாளாகும்.

இலங்கையில் சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை காவு கொண்ட, ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோரை காணாமல் ஆக்கிய சுனாமி பேரலை ஏற்பட்டு இன்றுடன் 15 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் உயிரிழந்த மக்களை நினைவு கூறும் முகமாக கடந்த 2005 ஆம் ஆண்டு அமைச்சரவையில் மேற்கொண்ட தீர்மானத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 26 திகதி தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினத்தில் சுனாமியில் உயிரிழந்த மக்கள் நாடளாவிய ரீதியில் நினைவு கூறப்படுகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.