நாட்டை அச்சுறுத்தும் சீரற்ற வானிலை – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு!


நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே இந்த உயிரிழப்புகள் சம்பவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில் 46 ஆயிரத்து 821 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஒரு இலட்சத்து 60 ஆயிரத்து 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இதுவரையில் முப்பது வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், ஆயிரத்து 169 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மண்சரிவு, வெள்ளம், மழை, மின்னல் மற்றும் பலத்த காற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் 51 இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.